பக்கம்:கனிச்சாறு 7.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


41

அன்புணர்வும்! அறிவுணர்வும்! செயலுணர்வும்!


அன்பென்று சொல்லுவார்;
அறிவென்று கூறுவார்;
அருந்துணை வரத்தயங்குவார்!
என்பென்றும் தசையென்றும்
நாரென்றும் பூட்டிய
இணைத்தொண்டர் நாங்களென்பார்!
முன்பென்று வந்தென்றன்
முழுநேரத் தொண்டுக்கும்
முதுகுச்சுமை தாங்கமாட்டார்!
பின்பென்றன் அறிவுக்கும்
செயலுக்கும் பெரும்பிழை
பேசியெனைப் பழிகாண்பாரே!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/101&oldid=1446096" இலிருந்து மீள்விக்கப்பட்டது