பக்கம்:கனிச்சாறு 7.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


114

காரல் மார்க்சு எனுங்கதிரவன்!


பாரினில் பாட்டாளிப் பகுதியர் யாவரும்
காரிருள் மூடிக் கண்கலங் குகையில்
காரல் மார்க்சு,எனும் கதிரவன் தோன்றி
ஓரியல்பு எனும்பொது ஒளியைப் பாய்ச்சினான்!
துவண்டு கிடந்த தொழிலாளர் உலகம்
உவந்து நிமிர்ந்ததவ் வொளிவெள் ளத்தினால்!

கூனிக் கிடந்தவர் முதுகுநே ரானது!
குறுகிக் கிடந்தவர் கைகள் உயர்ந்தன!

உழைப்பவர் உலகம் ஒன்று சேர்ந்திட
அழைப்பு விடுத்தான் அறிஞர் தலைவன்! 10

அழைத்த குரல்கேட் டனைவரும் வியந்தனர்!
உழைத்த கைகள் ஒன்று சேர்ந்தன!
வெம்பிய உளங்கள் விழித்துக் கொண்டன!
கும்பி காய்ந்தவர் கொதிப்புற் றெழுந்தனர்!
உழைப்பவர்க் குலகம் உடைமை என்றான்!
தழைக்கும் முதலாளியர் தருக்கை உடைத்தான்!
“எங்கல் செ”னும்உயிர் நண்பனோ டிணைந்து
பொங்கும் அறிவியற் பொதுவுடை மைக்கே
வடிவம் தந்திவ் வுலகுக்கு வழங்கினான்!
மடிவுற லானது முதலாளி மாண்பு! 20
விடிவு பிறந்தது வெயர்வை உடற்கெலாம்!
கொடியவர் ஆட்சியைக் குழியில் புதைத்தனர்!

உழவும் உழைப்பும் உடைமைக்கு உரிய - என
முழவு கொட்டிய மூதறி வாளனின்,
பொதுஅறம் பாடிய புதுமைச் சிற்பியின்,
பொதுமைக் கொள்கை யாங்கணும் பொலிகவே!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/197&oldid=1446996" இலிருந்து மீள்விக்கப்பட்டது