பக்கம்:கனிச்சாறு 7.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  163


கல்விப்பணி யோடுதமிழ்க்
கவின்பணியும் ஆற்றுவராய்
நல்விளக்கச் சான்றோரை
நயந்தழைத்து மாணவர்கள்
பல்வகையும் பயன்பெறவே
பலவுரைகள் பெறச்செய்து
தொல்வழியும் தூய்தமிழும்
துலங்கிடவும் உழைத்தவராம்!

தாம்பணிசெய் பள்ளியினைப்
பலவழியும் தரமுயர்த்தி
மேம்படவும் அவ்வூரார்
மெச்சிடவும் உழைப்பாற்றி
ஓம்புகின்ற நல்லொழுங்கால்
உண்மைநிறை தொண்டுளத்தால்
கூம்பாமல் ஒளிவீசிக்
கோபி.அரசு ஓங்குகவே!

தூயதிரே சாள்பள்ளித்
தலைமையா சிரியராக
ஏயமுப்பா னாண்டுகளாய்
ஏற்றமுடன் தொண்டாற்றி
நேயமுடன் பொன்விழாவை
நிகழ்த்தும் கோபி.அரசு
ஆயநலன் வளங்களுடன்
அருந்தமிழ்போல் வாழியவே!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/208&oldid=1447021" இலிருந்து மீள்விக்கப்பட்டது