பக்கம்:கனிச்சாறு 7.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


இன்றிருக் குந்தமிழ் நாட்டினர்க் கெந்தமிழ்ப் பற்றெழவே
அன்றிருந் தார்தமிழ் ஆய்ந்தது
போல்அர சாண்டது போல்
ஒன்றிரண் டன்றொரு நூறு குறள்நெறி ஓங்கிடினும்
நன்றுநன் றென்பேன் நனிவாழ்க வென்பேன் நலந்தரவே! 4

மாணவர் தந்தோள் மலையா
நெடுந்தோள்! மறல்மலிதோள்!
மாணவர் ஆண்மை மறிக்கொணா
ஆண்மை! மறைவிலாண்மை
மாணவர் உள்ளம் மடையுடை வெள்ளம்!
மலைவிலுள்ளம்!
மாணவர் ஆர்க்கும் குறள்நெறி கண்டான் மறைமலையே! 5

ஏலும் வகையெலாம் இன்றே
முனையும்! எழிற்றமிழ்த்தாய்
மேலும் சிறப்புற மேம்பணி யாற்றும்! மிளிர்கலைகள்
நாலும் உரைக்கும்; நலிந்த தமிழர் நலம்பெறவே
கோலும் வழியொன்று; மறைமலை கண்ட குறள்நெறியே! 6

தூக்கி நிறுத்தும் துவளுமெங் காளையர் தோள்களையே!
தாக்கி முரித்திடும் வெம்பகை சூழ்ந்த தருக்கரையே!
ஊக்கி வளர்த்திடும் அற்றைச் செழுந்தமிழ் ஒண்கலையே!
பூக்குந் தமிழ்க்குலத் திற்குக் குறள்நெறி புத்தெருவே! 7

-1967


176

‘ஐயை’ நூலுக்குப் படையல்!


இன்பினும் துன்பினும் எனையக லாமல்
அன்பினும் பணியினும் அயரா துதவிடும்
பெண்ணின் நல்லாள் தீதிலாப் பேதை
தண்ணியள் மனைவி தாமரைக் கிதுவே!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/257&oldid=1447136" இலிருந்து மீள்விக்கப்பட்டது