பக்கம்:கனிச்சாறு 7.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  211


174

தென்மொழி பாட்டரங்கப்
பகுதிக்கு முன்னுரை!


ஆர்விடுத்தா லென்ன? இங் கார்போற்றி னாலென்ன?
சீர்வழுவா யாப்பும் செழித்த தனித்தமிழும்
எந்தமிழர்க் குள்ளொளியை ஏற்றும் உயர்கருத்தும்
முந்தியிங் கில்லா முழுச்சிறப்பும் கொண்டு, அடிமைப்
பூட்டறுக்க வல்ல புதுமை ஒளிர் பாட்டே
பாட்டரங்கம் ஏறுகின்ற பாட்டு!

1967



175

‘குறள்நெறி’ இதழ்க்கு வாழ்த்து!


மொழிஆய் இலக்குவன் முத்தமிழ் காக்க முனைந்தெழுந்த
வழிஆய்ந் தெடுத்து வருதுயர் மேன்மேல் வரினுமினி
விழிவாய்ந் துடல்வாய்ந் துயிர்வாய்ந்
தற்றை வியன்றமிழின்
பழிமாய்ந் திடச்செய் குவனென்
றெழுந்தான் பயன்மகனே! 1

முறைகலை கற்பவன்; முத்தமிழ் ஆய்பவன்; மூண்டபகைக்
குறைமலைந் தோட்டித் தமிழ்க்குலம்
வாழக் குறள்நெறியென்
றறைதலுற் றானதற் காவி உடல்பொருள் ஆகவென்றான்;
மறைமலை என்னும் இலக்குவன் பெற்ற மணிமகனே! 2

கள்ளமி லாத்தமிழ்க் காதலுண் டுண்மைக் கருத்துமுண்டு;
வெள்ளமெ னத்தமிழ் வீறு முழக்கும் விறலுமுண்டு;
கொள்ள வெனத்தகு கொள்கையென்
றொன்றினைக் கொண்டுவிட்டால்
தள்ளவி லாத்தகை யாண்மையுண்
டன்னான் தகுதிறற்கே! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/256&oldid=1447135" இலிருந்து மீள்விக்கப்பட்டது