பக்கம்:கனிச்சாறு 7.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  239


206

‘சங்கே முழங்கு’ - நூலுக்கு வாழ்த்து!


செந்தமிழும் சிந்தனையும்
ஒன்றிணைந்து சீர்திருத்த
உணர்வும் சேர்ந்தால்,
வந்துவிழும் கருத்துகட்குப்
பஞ்சமில்லை; வளத்துக் கோர்
அளவும் இல்லை!
நொந்தமிழும் உள்ளங்கள்
நோய்படுத்த மக்களினம்
நொடிந்த வாழ்க்கை
வெந்தழியும் போதினிலே
விடிவுதர வேண்டாவா,
விழித்த நெஞ்சம்?

தமிழ்நெஞ்சால், தமிழ்நாட்டு
நல்லுணர்வால், நம் கடவூர்
மணிமாறன்
செய்
அமிழ்தூற்றுப் பாக்களெல்லாம்
ஆசிரியர், மாணாக்கர்
புலவர், மற்றும்
இமிழ் எழுத்தா ளர், பொழிவா
ளர், இதழா ளர், இளைஞர்
எனும்த லைப்பில்
குமிழ்தரூஉம் கருத்தொலிக்கும்
குவிசங் காய் முழங்குவதைக்
கூர்ந்து கேட்பீர்!

பாவேந்தர் தமிழியக்கம்
போலுமொரு செந்தமிழ்நூல்
பயந்த நெஞ்சம்
நாவேந்தும் நம்கடவூர்
மணிமாறன்
நவின்ற‘சங்
கே முழங்கு’
ஈவேந்தும் வாணிகராம்
தமிழ்ப்பா வலர்நடுவில்
எழுந்த கொள்கைப்
பாவேந்தும் செம்புரட்சி
செயவந்த பயன்மிகுநூல்!
பலசால் வாழ்க!

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/284&oldid=1447179" இலிருந்து மீள்விக்கப்பட்டது