பக்கம்:கனிச்சாறு 8.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  93


(பாலசுந்தரனாரின் பாத் தருக்கம்)
(அது முடிந்து, புலவர் இறைக்குருவனார்க்கு அழைப்பு)



புலம்பெரிதால் ஆன்று பொலிந்ததமிழ் வாழும்
நிலம்பெரி தென்று நினைந்து - வலம்புரியால்
இன்றமிழைக் காக்கும் இறைக்குருவ னார்கொள்கை
மன்றமிசை நிற்க மணந்து!

(இறைக்குருவனாரின் பாத் தருக்கம்)
(அது முடிந்து, பன்னீர்ச் செல்வனார்க்கு அழைப்பு)



வேந்தம் எனுமோர் விறல்தமிழ்த் தாளிகை விண்டளித்துக்
காந்தம் எனநற் கவின்பாத் திறத்தால் கனிந்த தமிழ்
மாந்தம் உயர மனமொழி மெய்தரும் மாண்புடைய
ஏந்தல்பன் னீர்ச்செல்வன் காட்டுக ஏற்றம் எழுந்துவந்தே!

(பன்னீர்ச்செல்வனாரின் பாத் தருக்கம்)
(அது முடிந்து, தொல்காப்பியனார்க்கு அழைப்பு)



பாப்புலவர் தொல்காப் பியப்புலவர் பாய்ந்தெழுந்தால்
யாப்பவர்முன் மண்டியிட்டே யாக்காதோ - காப்புளரேல்
தப்புவர்காண்! மற்றுத் தலைதாழ்த்தித் தங் கருத்துக்
கொப்புவர் காண் மன்றோ டுவந்து!

(தொல்காப்பியனாரின் பாத் தருக்கம்)
(அது முடிந்து, ஞானச் செல்வனார்க்கு அழைப்பு)



பொதுத் தொண்டே திரு.வி.க. வின்
புகழ்த் தொண்டாம்; பொலிந்த தொண்டாம்!
மதுக் கிண்டும் பொறிவண் டேபோல்
மலர்த்தமிழ்க் குந்திக் கிண்டி
மிதக்கிலை இன்பத் தால்அம்
மேலான தலைவர் என்றே
புதுக்குவர் கருத்தை ஞானச்
செல்வர்
யாம் புகழு மாறே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/107&oldid=1448120" இலிருந்து மீள்விக்கப்பட்டது