பக்கம்:கனிச்சாறு 8.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


புலிஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்! கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!

அதைஒரு நரிபோய் மாய்க்கும்!”


தொடவில்லை; தொட்டாலே விடவில்லை என்பார்;
தொடாததெதும் பாவேந்த னிடமில்லை என்பேன்!

கூரையின்மேல் குரங்கூசல் காட்டுகின்றான் காணீர்!
குறத்தியர்கள் ஒளியழகைப் பேசுவதைக் கேளீர்!!

“செருந்தி, ஆச்சா, இலந்தை
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒருமூங்கில்; இருகு ரங்கு
கண்டேன் பொன்னூசல் ஆடல்!”

‘குறத்தியர் கவண்எ டுத்துக்
குறிபார்க்கும் விழி,நீ லப்பூ!
எறியும்கை செங்காந் தட்பூ

உடுக்கைதான் எழில் இடுப்பே!’


நீரையவன் காட்டுகின்றான்! அந்நீரில் மேயும்
நெளிவை அவன் காட்டுகின்றான்! அருவியதும் பாரீர்!

‘பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து,
வரும் வெள்ளம்!’

“இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!"
அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக் கட்டி!

குளிர்மலர்; மணியின் குப்பை!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/136&oldid=1448481" இலிருந்து மீள்விக்கப்பட்டது