பக்கம்:கனிச்சாறு 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  123


நீரினுள்ளே கதிர்நுழைந்து நெளிவதைச்சொல் கின்றான்!
நீங்களுந்தாம் பார்த்திருப்பீர்! நினைவுவந்த துண்டா?

‘பின்னிய ஆடை காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர்க லந்து

நளிர்கடல் நெளிதல் கண்டேன்!


வேரினுள்ளே தமிழ்பாய்ந்தால், தமிழெருவைப் போட்டால்
விளைவெல்லாம் தமிழ்ப்பாதான்! வேறென்ன தோன்றும்?

தோற்றுகதிர் கடல்மிசையில் எழுந்ததுவும் தங்கத்
தூறல்வந்து விழுந்ததென்பான்! ஒளிவெளியாம் என்பான்!
‘மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து
வெந்துநீ றாகாமல் இருத்தல்வியப்’
பென்பான்!
ஏற்றுகின்ற உவமையெல்லாம் இயற்கையினைக் காண்பான்!
எடுத்துக்காட் டங்கொன்றும் இங்கொன்று மாக!
போற்றுங்கள் கேட்டுவிட்டுச் சிறந்திருந்தால்! அன்றேல்
புலவன்எவன், மற்றவனைக் காட்டிவிட்டுப் போங்கள்!

“உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்ந்த தைப்போல், பெருமணல்’
"முதலைகள் கிடப்பதைப் போல்
சின்னதும் பெரிதுமான வெடிப்புகள்!”
‘கீரியின் உடல்வண் ணம்போல்
மணல் மெத்தை’
‘காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பு’
‘வெண்தா மரையில் விளையாடும் வண்டுபோல்
கண்தான் பெயர,நீ என்ன கருதுகின்றாய்?” தாலாட்டு
‘புன்னை மலர்க்காம்பு போன்றதோர் சிற்றடிப் புறா!
கிளிக் கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை!’
‘பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும்’
‘கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி’
‘காட்டுமுயற் காதிலையும் களியானைத் துதிக்கை
அடிமரமும் வானில்
நீட்டுகிளை கொய்யா?’
‘ஓடுபிளந்தசெம் மாதுளைபோல் உதடு’
‘காதோரத்து வண்டுவிழி’
‘ஓடை மலர்முகம்’

‘காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை’

(முழுப்பாட்டு வேண்டுமா?)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/137&oldid=1448482" இலிருந்து மீள்விக்கப்பட்டது