பக்கம்:கனிச்சாறு 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

“ஓடு பிறந்தசெம் மாதுளை போல் உதட்டில்
உள்ளம் விளைத்தநகை மின்னவும் - கா
தோரத்து வண்டுவிழி ஓடை மலர்முகத்தில்
ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும்
காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை
காற்றோடு காற்றாகப் பின்னவும்
காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து
கடிதில் இடைதுவள ஆடியதோ என்னவும்
ஆடற்கலைக் கழகு தேடப் பிறந்தவள்
ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்!”

“எளிய நண்டின் கட்சிறிய களாக்கனி”
“குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீறல்கள்போல்’
துத்திக்காய் போலச் சுடர்முகச் சுருக்கம்’

“மீன்வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
                                                              (தேன்குழல்
“தாழையின் முள்போல் தகுசீ ரகச்சம்பா!”
“விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்த தைப்போல்
உழுந்து வடை”
“ஆனை அடிபோல் அதிரசம்”
“கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல்...பிட்டு”
“எருமைமுது கென்புபோல் பண்ணிய
தங்கமணிக் கோவை”
“முல்லையரும்பாம் குருவியின் மூக்கு!
மல்லி பிளந்தது போன்றததன் கண்!”

“கூனன் புகுந்தாலும் குனிந்து புகுங் குடிசை”


இப்படியாய் உவமைநலம் எடுத்தெடுத்துச் சொல்வான்!
எல்லாமும் இயற்கையிலே விளைந்துவந்த ஆக்கம்!
தப்படியாய் அடித்துவிட்டுத் தம்மடிக்கே ஒப்பத்
தமுக்கடிக்கக் காசுகொடுத் தோரிருவர் வைக்கும்,
செப்படியாட் டப்புலவன் பாவேந்தன் அல்லன்!
சீர்த்தி, அறம், செழுமையொடும் இயற்கைபுனை மேலோன்!
மப்படிக்கே மயிலாடல் உண்மையதாம் என்றால்,
மனங்களிக்கப் பாவேந்தன் பாடியதும் உண்மை!
ஒன்றுரைப்பேன் நீங்களதை உணர்ந்துகொளல் வேண்டும்!
உலகமெலாம் அலைந்தாலும் இப்புதுமை காணீர்!
துன்றிருளும் தூங்குகின்ற இடங்காட்டு வீரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/138&oldid=1448483" இலிருந்து மீள்விக்கப்பட்டது