பக்கம்:கனிச்சாறு 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


எரிசருகு தமிழர்களை எதிர்த்திடுவோர் என்றான்!
இன்னுமவன் நாடுபற்றிச் சொன்னமொழிகேட்பீர்!

‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’

‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’

‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்த தென்று

குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!’


புரிகின்ற தமிழ்ப்போர்க்குப் புதுப்புரட்டுக் காரர்
புலைமனத்தால் தடையிடுவார் நாம்அஞ்சல் வேண்டாம்.
சரிகின்ற தமிழினத்தைக் காத்திடுதற் கென்றே
சாகாத உணர்வுடைய இளைஞர்க்கிவை சொல்வான்!

‘தமிழ்நிலத்தில் தமிழான பயிர்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயல்மொழியாம் களைவிளைச்சல் மிகுதி!
தமிழ்நிலத்தில் தமிழ்க்கொள்கை எனும்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயற்கொள்கைக் களைவிளைச்சல் மிகுதி!
‘தமிழ்நிலத்தில் தமிழ்ஒழுக்கப் பயிர்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயலொழுக்கக் களைவிளைச்சல் மிகுதி!
தமிழர்களே களைநீக்க வேண்டாமா? உங்கள்
சமையஉளத் தாலன்றித் தமிழ்உளத்தால் சொல்க!’

‘தாய்த்திருநா டுயர்வெய்தும் நாளெந் நாளோ?

தமிழ்உயரும் நாளெந்நாள்’ என்றவனும் கவன்றான்!


வாய்த்தசெல்வம் அத்தனையும் ஏழையர்க்கே உதவும்
வழிசெய்ய வேண்டுமெனத் தமிழரைக்கேட் கின்றான்!
நோய்த்தமிழர் நோயுள்ளம் நோய்நீக்கி - நாட்டின்
நொடிவெல்லாம் நீங்கிநலம் பெறுதலென்றோ என்று
வாய்த்தமிழில் பாடியுளம் ஏங்கித்தவித் திட்டான்!
வருங்காலக் கனவுநலம் கூறுகின்றான் கேட்பீர்!

‘என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ?
                 செவியில் யாண்டும்
கன்னல்நிகர் தமிழிசையைக் கேளேனோ? கண்ணெதிரில்

                 காண்ப வெல்லாம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/146&oldid=1448531" இலிருந்து மீள்விக்கப்பட்டது