பக்கம்:கனிச்சாறு 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  131


‘ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக்
கற்கையிலும் எந்த நாளும்
தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்
பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!’

‘வடமொழியும் பிழைத்தமிழும் பெருகிவிட்டால்
வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்கும்’

‘பிறமொழிக்குத் துணைநின்றும் தமிழ்மொழியின்
பீடழிக்கத் துணைநின்றும் தமிழ்மொழியின்
சிறுமையுறு வடமொழிக்குக்
கழகங்கள் இங்கமைத்தும் தீங்கு செய்வார்’

‘நற்றமிழில், தமிழகத்தில் நல்லெண்ணம்
இல்லாத நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்

கடிநாயை அமைத்திடலாம்’


மொழிநிலையிற் பாவேந்தர் தமிழர்க்குச் சொன்ன
முழுக்கருத்தும் தமிழர்களின் உளத்திருத்தல் வேண்டும்!
அழிநிலையில் உள்ளதமிழ் அழியஅழி யத்தான்
ஆன்றஇனம் அழிந்துவரும் உண்மையிது காண்பீர்!
விழிநிலையில் வைத்துதமிழ் காத்துவரல் ஒன்றே
வீழ்ந்தஇனம் மீண்டுமெழ வாய்ப்புநல்கும் என்பேன்!
பழிநிலைக்கே ஆளாக வேண்டாமே தமிழர்!
பாழ்விழுந்தால் தமிழினமே படிப்படியாய் மாளும்!

4. நாடு

இனியவனும் நாடுபற்றி எடுத்துரைத்த வெல்லாம்
இங்கெடுத்துக் கூறிவிடல் எளிதிலைகாண் பெரியீர்!
‘எனையீன்ற தந்தைக்கும் தாயினுக்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு தனக்குமென்ற னாலே
தினையளவும் நலமேனும் கிடைத்திடுவ தென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாம்’
என்றே
பனிமொழியில் சூளுரைத்துப் பால ந்தன் சொன்னான்!
பாவலருள் எவரிந்த உரைசொன்னார்? பாரீர்!

எரிகின்ற நெஞ்சின்மேல் ஆணையிட்டுச் சொன்னான்!
இனியெங்கள் ஆட்சியிந்த நாட்டிலென்றே உரைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/145&oldid=1448530" இலிருந்து மீள்விக்கப்பட்டது