பக்கம்:கனிச்சாறு 8.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  151


தீண்டாமை ஒழிப்பு

(வேறு)

“அற்பத் தீண்டாதார் என்னும் அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தா ரன்றோ - சகியே! (கர்ப்பத்தில்)
பொற்புடை முல்லைக் கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார்நம்பு வார் - சகியே” (சொற்படி)


(வேறு)


“ஏகபரம்பொருள் என்பதை நோக்கஎல்
லாரும் உடன் பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி

லே, உள்ள தோ, சிறப் பே!”

(வேறு)


புதுவைக் குயிலின் புரட்சிக் குரலொலி
இதுவரை மட்டுமா? இன்னமும் கேளீர்!

(வேறு)



“..................... வயிற்றுக்கு ஊற்றக்
கூழின்றி வாடுகின்றார் எழுந்திருநீ இளந்தமிழா
குறை தவிர்க்க!
ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்!
இன்பத்தை ஆக்குவிப்பாய்!”

(வேறு)


“எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே
இன்றே இன்னே
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய்!
புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!”

(வேறு)


“பேச்சாலும் எழுத்தாலும் பாட்டாலும்
கூத்தாலும் பிறர் உவக்க
ஓச்சுகவே மணிமுரசு! வீதியெலாம்
உலவா நீற்பீர்!
ஏச்சாலும் எதிர்ப்பாலும் வருகின்ற
இன்னலுக்குள் இன்பவெள்ளம்
பாய்ச்சாதோ பொதுத் தொண்டு
பைந்தமிழ்க்குச் செயுந்தொண்டு

பருக வாரீர்”

(வேறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/165&oldid=1448564" இலிருந்து மீள்விக்கப்பட்டது