பக்கம்:கனிச்சாறு 8.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


“மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப் புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெ லாம் உழைத்தார்!”

(வேறு)


மண்மீதில் உழைப்போ ரெல்லாம்
வறியராம்; உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம்;இதைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!


3. அவன் பாடல் பொதுவுடைமைக் குரல்கொடுத்து நிற்கும்!
ஆர்க்கின்ற புரட்சிக்கு வழிவகைகள் செய்யும்!

(வேறு)


“ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு ஒருநிலம்
ஒருதொழில் ஓர்ஏர் உழவு மாடுகள்”

“ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்”

“எல்லாக்கும் தேசம், எல்லார்க்கும் உடைமையெலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே”

“புகல்வேன் உடைமை மக்களுக் குப்பொது:
புவியை நடத்து பொதுவில் நடத்து”

“புதியதோர் உலகுசெய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்”

“இருக்கும் நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை
ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்!”


4. அவனடித்த சாவுமணி - சாதிக்கு - கேட்பீர்
அனைவருமே சமமென்றால் அதிலென்ன தொல்லை?!

“சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?

சமயம் சாதி தவிர்தல் எந்நாள்?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/164&oldid=1448560" இலிருந்து மீள்விக்கப்பட்டது