பக்கம்:கனிச்சாறு 8.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  149

“உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை
உனக்குவருந் தீமையன்றோ?
பிணிநீக்க எழுந்திரு, நீ இளந்தமிழா
வரிப்புலியே....”

“அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும்
துறைதோறும் அழகுகாப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும்

முதற்பணியாம் எழுகநன்றே”

(வேறு)


2. அவன்செய்த தொழிலாளர் புரட்சியுரை கேட்பீர்!
அன்னவர்கள் முன்னேற்றம் கருதியிவை சொன்னான்!

(வேறு)


“சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


கேட்டான் பாவேந்தன்!

கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் (சுரங்கம்)
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளை கடல்முத்தை மணிக்குலத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

(வேறு)


சித்திரச் சோலைகளே! உமைநன்கு
திருத்த, இப் பாரினிலே,முன்னர்
எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ, உங்கள் வேரினிலே!

(புல்கானின் குருசேவ் தாஜ்மகால் கருத்து)
"நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே”

“தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தஅக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

சொல்லவோ ஞாலத்திலே!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/163&oldid=1448558" இலிருந்து மீள்விக்கப்பட்டது