பக்கம்:கனிச்சாறு 8.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


இல்லற உரிமை:

“பெண்டாட்டி என்று பெயரடைந்த நாள்முதலே
ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதி உண்டுரிமை!
தன்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான் செயலாம்!
இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம்”

“கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின் றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரை

புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்”


மறுமண உரிமை:

“துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிடு வோம்புவிமேல்!”

(வேறு)


“ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?

“துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ?
சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள் உள்ளம்
அணையாத காதலினை அணைக்கச் சொன்னீர்!

அணைகடந்தால் உங்கள் நடை எந்தமூலை?”


பொதுத்தொண்டு உரிமை:

(வேறு)


“தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் - பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்!
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்!"

தடையினைக் காலினால் தேய்ப்பாய்!”


5. இனமானக்குரல்!

“தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!

செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/172&oldid=1448579" இலிருந்து மீள்விக்கப்பட்டது