பக்கம்:கனிச்சாறு 8.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப் பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந்
தோளால் தொடங்குக பணியை!

சிறுத்தையே! வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செயப் புறப்படு!

சூத்திரன் இல்லை!
மனிதரில் நீயுமோர் மனிதன்! மண்ணன்று!
இமை திற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு! (முகம் தொங்கிக்
                                                              கிடக்காதே)
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!”

“அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை

அழிக்குமுறை எவ்வாறு முடியும்?


ஆண் பிள்ளைத் தாலாட்டு!

“ஆரியர்கள் இங்கே அடிவைக்கு முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே!”

(வேறு)


“வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொ ணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளுநாள் எந்நாள்? உள்ளம்

சொக்குநாள் எந்த நாளோ?”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/174&oldid=1448581" இலிருந்து மீள்விக்கப்பட்டது