பக்கம்:கனிச்சாறு 8.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  161


(வேறு)

“ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
...............................................................”

(வேறு)


“தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழனுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!”

(வேறு)


“தமிழனொரு தமிழனுக்குத் தீங்கு செய்தால்
தனிமுறையிற் செய்ததென அதை மறந்து
தமிழரது பொதுநலத்துக் குயிரும் தந்து
தமிழரது பண்பைநிலை நிறுத்தல் வேண்டும்!
தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை
தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?
தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்கநேரம்

தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்!


முடிவு:


பாரதி தாசனார் பாட்டுகள் ஆரியர்
வேரை அறுப்பன! விளைவைத் தடுப்பன!
வேதப் புரட்டுகள் தமைவெருட் டுவன!
புராணப் புளுகினைப் புதைத்துமூ டுவன!
சாதிக் கொள்கையைச் சாகடித் திடுவன!
மதப் புரட்டுகளை மாய்த்துத் தொலைப்பன!
மூடக் கொள்கைக்குத் தீமுட் டுவன!
தமிழனுக் குணர்வைத் தந்திடும் தணல்அவை!
அமிழாக் கொள்கையை ஆர்க்கும் முரசவை!
வளைந்த கூனை நிமிர்த்தும் வகையின!
குலைந்த அவன்றன் குலத்தை இணைப்பன!
தமிழ்மொழிக் கவை எரு! தாழ்ச்சிக்கு நெருப்பு!
அமிழ்ந்த புகழை அகழும் மண் வெட்டிகள்!

தூங்கிக் கிடந்த தமிழர் தோள்களை
வீங்க வைத்தன பாவேந்தர் பாக்கள்!

வாடிக் கிடந்த தமிழர் நரம்பினில்
ஓடிக் கிளர்ந்தது செந்தமிழ்க் குருதி!

அடைத்துக் கிடந்த தமிழரின் உணர்வுகள்
புடைத்துப் பொருமின பாவேந்தர் பாட்டால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/175&oldid=1448583" இலிருந்து மீள்விக்கப்பட்டது