பக்கம்:கனிச்சாறு 8.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது மாளும்’

‘ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்

பேரர்க்குப் பேரனே!’


- புதுவைக் குயிலின் புரட்சிக் குரலொலி
இதுவரை மட்டுமா? இன்னமும் கேளீர்!

தமிழனொரு தமிழனுக்குத் தீங்கு செய்தால்
தனிமுறையிற் செய்ததென அதை மறந்து
தமிழரது பொதுநலத்துக் குயிரும் தந்து
தமிழரது பண்பைநிலை நிறுத்தல் வேண்டும்!
தமிழனுக்குத் தனிமுறையில் செய்த தீமை
தமிழர்க்குச் செய்ததென நினைத்தல் நன்றா?
தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்

தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்!


நம்மினத்தை அன்னவன்போல் விழிக்கவைத்த முயற்சி
நாளைவரை எப்புலவன் தமிழகத்தில் செய்தான்!
வெம்மனத்தைக் கொண்டுள்ளோம்! வீண்வாழ்க்கை வாழ்வோம்!
விடியாத மூஞ்சிகளாய்த் தூங்குகின்றோம் இன்னும்!
அம்மணமாய் நம்முன்னர் அலைந்தவர்கள் எல்லாம்
அழகழகாய் உடையுடுத்தே உலகஉலாப் போந்தார்!
கும்மிருளில் குருட்டாட்டம் போடுகின்றோம்! ஐயோ!
‘கும்பிக்குச் சோறு’என்றால் தாயினைவிற் கின்றோம்!

3. நாட்டுணர்வுள்ளம்:

மொழிவிடு தலையும் இனவிடு தலையும்
பழியிலாப் பாவலன் விரும்பிய கொள்கை!
நாட்டு விடுதலையும் நன்றென மொழிந்தான்!
வாட்டு ஆரியத்தினும் வடவர்சூழ்ச் சியினும்
தமிழக மக்கள் தப்பிட வேண்டில்
தமிழகம் பிரிதலும் தக்கதே என்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/186&oldid=1448636" இலிருந்து மீள்விக்கப்பட்டது