பக்கம்:கனிச்சாறு 8.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘கடல்நீரும் நீலவானும் கைகோக்கும்’ என்றே
கற்பனைக்கும் கற்பனையாய் யார்சொன்னார்? கேட்பீர்!

‘கடல்நீரும் நீல வானும்
கைகோக்கும்! அதற்கி தற்கும்
இடையிலே கிடக்கும் வெள்ளம்!
எழில்வீணை! அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத்தின் பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி

வன்கடல் பண்பாடல் கேள்!


உடலிலவன் நறுந்தென்றல் உணர்வுபெற்றுப் பேசும்
ஒருபாட்டைக் காட்டுகிறேன் கேளுங்கள் நன்றாய்!

‘களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்றே லே, நீ!

செருந்தி, ஆச் சா,இலந்தை
தேக்கீந்து, கொன்றை, எல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒருமூங்கில்; இருகுரங்கு

கண்டேன்பொன் னூசல்ஆடல்!
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/190&oldid=1448650" இலிருந்து மீள்விக்கப்பட்டது