பக்கம்:கனிச்சாறு 8.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


“பைந்தமிழ்த் தேர்ப்பாகன்” என்றொருவர் பாடுகின்றர்!
“நீடுதுயில் நீக்கிடவே பாடிவந்த நிலா” வென்றே
பாடுவார் மற்றெருவர்; பாவேந்தர் பாடல்களில்

“கற்பனை ஊற்றைக், ‘கருத்தின் புதையல்களைச்”
சொற்படுத்திக் காட்டுகின்றார், சொல்வல்லார் வேறொருவர்!

‘படருகின்ற சாதிக்கு, நம் பாவேந்தர் மருந்தெடுத்துத்
தடவ வருகின்றார் தக்கவொரு பாப்புலவர்!

‘புரட்சிப் புயலென்றும் புதுமைப் புனலென்றும்’
திரட்சித் தமிழ்ச்சொற்கள் தேர்ந்தெடுத்துக் கூறுதிறன்
வல்லஒரு சொல்லாய்வை வாழ்வாய் அமைத்துக் கொண்ட
நல்லஒரு பாப்புலவர் நாட்டிடவும் வந்துள்ளார்!

அன்னவரின் பாடல்களை அமர்ந்து அமைந்திருந்து
உன்னிப்பாய்ச் செவிமடுக்க உங்களைநான் வேண்டுகிறேன்!
முதற்கண்,
கருத்தாயும் செம்புலவர் கடவூர் மணிமாறன்
திருத்தமிழ்க்குப் பாவேந்தன் தேர்ப்பாகன் என்பதனை
நிறுத்தாய்ந்து பாவரங்கை நிகழ்த்தித் தொடங்கிவைப்பார்-
பொறுத்தாய்ந்து பாருங்கள்! பூரிப்பில் மிதப்பீர்கள்!

கருவூர்க் கன்னல் கலைஞர்க்குச் செல்லப்பிள்ளை
மருவில்லாத் தூய்தமிழில் மணக்கின்ற பாட்டிசைப்பார்!
‘கற்பனை ஊற்றாம் கருத்தின் புதைய’ லென்று
சொற்புனையும் பாவேந்தைச் சோர்வின்றிக் காட்டிடுவார்!

பாவலர் எழில்வாணன் பதறாமல் பாட்டிசைக்கும்
ஆவலர்; தூயதமிழ் ஆர்வலர்! பாவேந்தர்,
‘படரும் சாதிக்குத் தந்த படைமருந்தைத்
தடவ வருகின்றார்; தனித்தமிழில் பாடல் சொல்வார்

எல்லாமாய் இருக்கின்ற ஏற்றமுற்ற தமிழ்மொழியின்
சொல்லாய் வறிஞர், சோர்வின்றிப் பாட்டிசைக்கும்
வல்லாளர் பாவேந்தர் வாழ்ந்திருந்த ஊர்க்காரர்!
பொல்லார் நடுக்கமுற, ‘புரட்சிப் புயல்’ என்றும்
‘புதுமைப் புனல்’ என்றும் பாவேந்தைப் புறந்தருவார்
பாவலர் அருளி பொங்கிவிடும் பாச்சுவைபோல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/200&oldid=1448669" இலிருந்து மீள்விக்கப்பட்டது