பக்கம்:கனிச்சாறு 8.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 185


அவர்கண்ட கனவென்ன? அவர் கொண்ட கொள்கையென்ன?
இவர்க்கு விழா எடுப்பதெனில் இவை முடிக்க வேண்டாமா?
நாவேந்தர் சொன்னவற்றை நாம்செய்ய வேண்டாமா?
பாவேந்தர் பகர்கின்றர்! பாட்டடிகள் கேளுங்கள்;

“என்தமிழ் அன்னை துன்பம் நீங்கித்
தூய்மை எய்தித் துலங்குதல் காண்பேன்!
என்தமிழ் நாடு தன்னாட்சி பெற்றுத்
துலங்கிடுதல் காண்பேன்! - தமிழர்

நலங்காண் பேன், நான் நானில மீதிலே!”


என்றைக்கிந்தப் பாட்டடிகள் இலக்குநிறை வேறிடுமோ
அன்றைக்குத்தான் நாமவர்க்கே ஆர்க்கும் விழாவெடுக்க
வேண்டுமென்பேன்! இஃதென் வேண்டுகோள் மட்டுமன்று?

மூண்டெழுந்த புரட்சிப் பாவேந்தர் முழக்கமன்றோ
அதற்குநாம் முதற்கண் அணியமாக வேண்டாமா?
இதற்குமொரு தீர்வைப் பாவேந்தர் எடுத்துரைப்பார்:

சாதி ஒழித்தோமா? இல்லையே! நமக்குள்நாம்
மோதிக் கொண்டன்றோ மூண்டழியப் பார்க்கின்றோம்!
நல்லதமிழ் வளர்த்தோமா? இல்லையே! நாமின்றும்
தில்லியனுக் கஞ்சியன்றோ இந்தியிலே இளிக்கின்றோம்!
கொச்சைத் தமிழில் குரலெடுப்பாய்ப் பேசிவிட்டுப்
பச்சைத் தமிழனென்றும் பைந்தமிழில் அறிஞரென்றும்
உச்சி குளிர்கின்றோம்! ஊரை ஏ மாற்றுகின்றோம்!
மெச்சிடவே பாவேந்தர் செந்தமிழர் மேன்மைக்குக்
காட்டும்வழி தானென்ன? கவனிக்க வேண்டாமா?
நீட்டி முழக்கவில்லை; நின்றிதனைக் கேளுங்கள்!

“சாதி ஒழித்திடல் ஒன்று! - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற

பாதி துலங்குவ தில்லை!


இந்த நினைவுகளோ டிங்குநிகழ் பாட்டரங்கை
வந்திருக்கும் சான்றோரே! வணங்கத்தகு தாய்மாரே!
அமைந்திருந்து கேளுங்கள்! அருந்தமிழ்செய் பாவலர்கள்
நமைஉயர்த்திப் போயிருக்கும் நற்றமிழப் பாவேந்தர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/199&oldid=1448667" இலிருந்து மீள்விக்கப்பட்டது