பக்கம்:கனிச்சாறு 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 19


கூழின்றி வாடுகின்றார் எழுந்திருநீ இளந்தமிழா
குறைத விர்க்க

ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
ஆக்கு விப்பாய்!

ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே!

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும்
தீமை அன்றோ?
பிணிநீக்க எழுந்திருநீ இளந்தமிழா, வரிப்புலியே,
பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! விடுதலைகொள்
அழகு நாட்டில்!
பணிசெய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
பழநாட் டானே!

எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே!
இன்றே இன்னே
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே!
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
அழகு காப்பாய்
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம்
எழுக நன்றே!


புரட்சிப் பாவலர் புகட்டிய மறப்பால்
குறட்டை விட்ட தமிழரின் குரலையும்
வறண்ட நெஞ்சையும் நனைத்ததும் தமிழர்
அரண்டு விழித்தனர்; ஆர்த்தெழுந் துருமினர்!
மறந்த தமிழ்நலம் பேணத் தொடங்கினர்!
இறந்த பழம்புகழ் தமிழ்மேல் ஏற்றினர்!
ஆரியப் பகையின் அடிவயிறு கலக்கினர்!
ஏறிய அவர்திறம் இறக்கிக் காட்டினர்!
விழித்த தமிழரின் வீறுற்ற செவிகளில்
மொழித்திறம் மிக்க பாவலர் மொழிந்தார்;


‘குறியுற்ற மறவர்களே இப்பணியை முடிப்பதற்கோர்
கூட்டம் வேண்டும்!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/33&oldid=1447639" இலிருந்து மீள்விக்கப்பட்டது