பக்கம்:கனிச்சாறு 8.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 21

குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல் போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு.
பொன்மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால் தடம்பெருந்
தோளால் தொடங்குக பணியை’

‘சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செயப் புறப்படு’

‘மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு, நடத்து உலகத்தை!’


சொற்களா இவை? இல்லை; உணர்வுப் பிழம்புகள்!
எஃகுக் குழம்பில் ஈட்டியைத் தோய்த்துக்
கருங்கற் பாறையில் எழுதிய வரிகள்!
வருங்கா லத்துத் தமிழினத் துக்கும்
தாங்கா வெப்பத் தணல்வரிப் பாக்கள்!
ஈங்கிது நாள்வரை எழுந்திடா உணர்வு!
தமிழர் மடிதுயில் நீக்கிய வெந்தணல்!
இமிழா தவருளத் தேற்றிய மறவரி!
தமிழனின் ஒவ்வொரு குருதித் துளியினும்
அமிழ்ந்து கிடந்த ஆர்ப்பும் உணர்வும்
பாரதி தாசனார் பாக்களால் விம்மின!
வீறு பெற்றன! கோழைமை வீழ்த்தின!
இன்ன எழுச்சியைப் பார்ப்பனர் ஏற்பரா?
என்ன திறமை எனினும், அத் திறமை
ஆரிய நலன்களுக் குதவினால் அன்றோ

‘சீரிது; நேரிது; சிறந்த நூலிது;
முன்னோர் எவரும் மொழிந்திடாக் கருத்திது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/35&oldid=1447642" இலிருந்து மீள்விக்கப்பட்டது