பக்கம்:கனிச்சாறு 8.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 25


எத்தனைத் தோழர்கள் ரத்தம் - சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்த அக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே!

மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெலாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே, சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?”


புதியதோர் உலகு செய்யப்
புறப்பட்டார் பாவின் வேந்தர்!
பொதுமையங் கிருந்த தன்புப்
புனிதமங் கிருந்த தாட்சிப்
புதுமையங் கிருந்த தெல்லாம்
புத்துணர் வுற்ற செய்தி!
எதனையிவ் வுலக மெல்லாம்
ஏற்குமோ அதனைச் சொன்னார்!

இதுவரை தமிழில் இல்லா திருந்த
புதிய நினைவுகள்! புதிய கருத்துகள்!
யாப்பிலும் மொழியிலும் எளிமையைக் காட்டிப்
பாப்புனைந் திட்ட பாவலர்க் கரசர்!
சீதையை இராமனைப் பாடிய பாட்டன்று!
கோதையை மாலினைப் புனையும் கதையிலை!
தமிழ்க்குமு காயம் உலகினில் தழைக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/39&oldid=1447649" இலிருந்து மீள்விக்கப்பட்டது