பக்கம்:கனிச்சாறு 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


விரைவா ஜல்தியா? விசாரணையா உசாவலா?
வருஷமா ஆண்டா? வருகையா ஆஜரா,
ஸ்நானமா குளிப்பா? ஸ்நேகமா நட்பா?
திவ்வியம்
தேவையா? இனிமை தேவையா?
இவ்வகை தொடர்ந்தே? இயம்பிப் போகலாம்.
எனவே அன்பரீர் இனிமை என்பது
கனவோ நனவோ அன்று, தனித்தமிழ்
தனிச்சுவை பொதுளத் தான்நடப்பதுவே!

தனிமை:

தனிமை என்பதும் தமிழ்மொழிச் சிறப்பே!
பனிமலை வரையே பரவிய மொழிகளுள்
இராச மாலம் குடகம் கோண்டு,
மகா ராட்டிரம் கூர்க்கம் இவற்றொடு
தெலுங்கங் கன்னடம் துளுமலை யாளம்
முதலிய திரவிட மொழிகள் பிரியினும்
தனித்து நிற்கும் தமிழ்மொழி போல
இனித்த மொழியினை எங்ஙன் காண்குவம்?

புதுமை:

புதுமை பேசலும் பொதுமை கூறலும்
மதுநிகர் தமிழ்க்கலால் மற்றதற் கியல்வதோ?
மூலத் தனிப்பெயர் எதுவானாலும்
கோலத் தமிழில் கூறுதல் புதுமையே!

புகைவிடும் வண்டியைப் புகைவண்டி என்றது
பகையினாலா? புதுமையின் பயில்வா?
மிளகுபோற் காயை மிளகாய் என்றதும்
அழகுக் காகவா? புதுமையின் ஆய்வா?
இன்னும்
உருளைக் கிழங்கும் உந்து வண்டியும்
கருத்தடை, புகைப்படம், நாடாப் பதிவு,
திரைப்படம், வானொலி, அச்சு, தட்டச்சு,
இரையொலி பெருக்கி, இசைத்தட்டு, அஞ்சல்,
தொலைபேசி யோடு தொலைவரி, காட்சி,
வானூர்தி மற்றும் உந்தம், மதிவண்டி,
வேதியல், விளங்கியல், விலங்கியல் யாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/50&oldid=1447667" இலிருந்து மீள்விக்கப்பட்டது