பக்கம்:கனிச்சாறு 8.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

துன்பங்கள் நீங்கும் சுகம்வரும் நெஞ்சினில்

தூய்மையுண் டாகிடும், வீரம் வரும்!’

புதுவைப் புலவன் கற்பனை வளத்தில்
எதுவெடுத் துரைப்பேன்? எதனை விடுப்பேன்!
கற்பனைத் தேனாறு! கவின்நிலா வானம்!
பொற்புனைந் தெடுத்த புதுமணப் பூக்கள்!

‘முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற

பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை’

- என்று, அவர் காயும் தலைவியின் ஏசலில்
நின்ற கற்பனை நினைத்து மகிழ்மின்!
மேலும் அத்தலைவி பகலினைக் கடிவாள்!
ஏலுமா நமக்கு ? இத்தகு கற்பனை!

“மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து

வெந்து நீறாகாமல் இருப்பதொரு வியப்பே”

பாரதி தாசன்,தன் உள்ளக் கொதிப்பைப்
பாரதிர முழக்குதல் பாருங்கள் இங்கே;

‘மண்மீதில் உழைப்போ ரெல்லாம்
வறியராம்: உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்;இ தைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம்
கண்டுகண் டந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த

விரிவானம் பாராய் தம்பி!’

எப்படி? அவர்தாம் இயம்பிய கற்பனை?
இப்படிப் புரட்சியாய் எழுதிய தவர்மனம்!

அடுத்து, ஒரு புலவருக் கிருக்கும் ஆற்றல்
எடுத்தது உவமையால் விளக்குதல்; இல்லையா?
பாவேந்தர் உவமைகள் பழுதிலா உவமைகள்.

‘பொரியலோ பூனைக்கண்போல் பொலிந்திடும்' என்பார்.
‘குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீறல்கள்போல்

துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி ஏனழுதாய்’

- என்று கேட்பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/70&oldid=1447982" இலிருந்து மீள்விக்கப்பட்டது