பக்கம்:கனிச்சாறு 8.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


காலை, கதிர், கடல், செம்பொன் வானம்!
கோலக் காட்சியைப் பாவலன் கூறுவான்:

‘எழுந்தது செங்க தீர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூறல்!

வெளியெலாம் ஒளியின் வீச்சு!”


‘அழகின் சிரிப்பு’ எனும் நூல்,அவர் சுவைத்த
இயற்கை ஓவியக் கோப்பென் றியம்பலாம்!

‘அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும் சிலிர்க்கச்

செல்வம்ஒன்று வருமதன்பேர் தென்றற் காற்று!’


இருள்போய் ஒளிந்த இடத்தைத் தேடி
அருள்தோய் பாவலர் அடைந்ததைக் காண்மின்!

‘அடுக்கிதழ்த் தாம ரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில்

படுத்திருப் பாய், நீ’ - என்றே


இருளினைப் பாடுகின்றார்!

“களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி,
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்ற லே, நீ!

செருந்தி,ஆச்சா, இலந்தை
தேக்கீந்து, கொன்றை, எல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒரு மூங்கில்; இரு குரங்கு
கண்டேன் பொன் னூசல் ஆடல்!

ஆனையொன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
பூனையொன் றணுகும்; அங்கே

புலியொன்று தோன்றும்; பாம்பின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/74&oldid=1448036" இலிருந்து மீள்விக்கப்பட்டது