பக்கம்:கனியமுது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

அப்பாவி முருக வேளோ—
       “அவளது நகைச்சு வைக்குத்
தப்பாகப் பொருள் கொள்ளாதே!
       தயங்காதே கண்ணா!” என்றான்.
அப்பால் போய் மனையாள் நோக்கி
       “அப்படிச் சொல்ல லாமா;
எப்போது விளையாட்டு?” என்றே
       ஏகினன் அலுவ லுக்கே!

கண்ண்னோ பெயருக் கேற்ற
       கண்ணியன்! அன்றோர் நாளில்
நண்ணிடும் முடிவு சற்றும்
       நடைமுறைக் கியலு மாவென் (று)
எண்ணிடா உளத்த னாகி,
       முருகவேள் இயம்பும் சொல்லைப்
பெண்ணிடம் பேசு கின்றான்,

       பிறன்மனை விழையும் பேதை!

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/58&oldid=1380329" இலிருந்து மீள்விக்கப்பட்டது