பக்கம்:கனியமுது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


"கனிமொழி வா வா; என்றன்
கண்ணனைப் பார்த்துக் கொள்வாய்;
இனிமேல் நீ என்னைப் போலே
இவனையுங் கருத வேண்டும்;
தனியாக வேறு வீட்டில்
தவித்திடா வண்ணம், இங்கே
எனக்குள வசதி முற்றும்
ஏற்பாடு செய்வாய்!" என்றான்.


கொழுநனே தெய்வம் என்னுங்
குலக்கொடி, கரங்கு வித்துத்
தொழுதனள் கூறு கின்றாள் :—
துணைவரின் துணை வருக்குப்
பழுதிலா வாறு பார்க்கும்
பக்குவந் தெரிந்த வள்நான்
கழுதையாய் உழைப்பேன்!" என்றாள்;

கண்ணனோ திடுக்குற் றானே!

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/57&oldid=1459288" இலிருந்து மீள்விக்கப்பட்டது