பக்கம்:கனியமுது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


பத்தாண்டு காலத்தின் முன்னே, ஓர் நாள்
பணம்கேட்க நகருக்குச் சென்ற போது
வித்தாரக் கள்வன், இவர் கடனுக் கஞ்சி
வீட்டைவிட்டே மறைந்தோடி ஒழிந்து போகக்
கொத்தாத கனிபோன்ற மனைவி ஒன்று
கொடுமைநிலைக் காட்பட்டுத் தவித்தல் கண்டு
பித்தான நெஞ்சத்தில் இரக்கம் பொங்கப்
பேணிவரத் தலைப்பட்ட அன்பு நாதர்...


ஏமாந்த கமலத்தைக் தேற்றச் சென்றே
இனம்விளங்கா மனமயக்கம் எய்தப் பெற்றார் !
காமாந்த காரமில்லை; ஆனால் இன்பக்
காதலென்று கூறுதற்கோ வயது மில்லை !
சாமான்ய அன்புமில்லை; காணா விட்டால்
சாவதற்கும் துணிகின்றாள் கமலம் ! இந்தப்
பூமான்மேல் உயிர்வைத்தாள் ! உலகம் கண்டால்
புரளிச்செய்யும் என்பதனால் முடங்கி வாழ்ந்தாள்!

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/65&oldid=1380254" இலிருந்து மீள்விக்கப்பட்டது