பக்கம்:கனியமுது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

மதுமலர் போல் இன்பத்தைத் தேக்கி வைத்து
       வாழ்க்கையதன் சுவைநுகரத் துடித்து வந்த
புதுமணப்பெண், வெறுங்குடிசை—குதிரை வண்டி
       பொல்லாத அயல்வீட்டார் கொல்லுங் கண்கள்-
அதுவரையில் அறிந்திராத பிரிவுத் துன்பம்—
       அடிவயிற்றில் வளர்கின்ற கருவின் தொல்லை—
எதுவரினும் துணிவதென ஓட்ட லானாள்,
       எங்குமிலாப் பெண் இயக்கும் குதிரை வண்டி!

குப்பண்ணன் சிறையினின்று வரும் மீண்டும்
       குதிரைக்குக் கடிவாளம் பிடிப்பான் சின்னாள்!
இப்புவியின் மக்களினம் பெருக்கு தற்கே
       இயன்றவரை ஒத்துழைக்க வந்த வன் போல்-
தப்பாமல் மனைவிக்குக் குழந்தைப் பேறு.
       தந்திடுவான் ! மறுபடியும் மதுவில் முழ்கி,
எப்போதும் குடியிருக்க ஏற்ற தென்றே

       ஏகிடுவான் சிறைக்கோட்டம்; இதுவா டிக்கை !

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/99&oldid=1380076" இலிருந்து மீள்விக்கப்பட்டது