உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் களனும்

11

சிதறுண்டது. ஆயினும், இவை வலிமை குன்றாத அரசுகளாகவே நிலவின.

பாண்டியப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும், விஜயநகரப் பேரரசர் ஆட்சிக் காலத்திலும், தென்னாட்டின் கடல் வாணிகமும் செல்வ வளமும் உச்ச நிலை அடைந்தன. உலக வாணிகத்தில் தென்னாட்டவர், சீனருடனும், அராபியருடனும் கை கோத்து உலாவினர். உலகின் பொன்னும், மணியும் மிகப் பேரளவில் தமிழகத்திலும், தென்னாட்டிலும் வந்து குவிந்து கிடந்தன. இப்பெரு வளம் மேலை நாட்டினர் பொன்னாசையைத் தூண்டிற்று. 15-ம் நூற்றாண்டின் இறுதியில், போர்ச்சுகீசிய நாட்டானாகிய வாஸ்கோடகாமா கடல் மூலமாகத் தென்னாட்டுக்கு வர வழி கண்டான். அவன் கள்ளிக்கோட்டையில் இறங்கி, அதன் குடிமன்னனாகிய சாமூதிரியின் ஆதரவையும், விஜய நகரப் பேரரசனாகிய கிருஷ்ண தேவராயரின் ஆதரவையும் பெற்றான்.

16-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரும், டச்சுக்காரரும், 17-ம் நூற்றாண்டில் பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தென்னகக் கடற்கரைப் பட்டினங்கள் பலவற்றில் வாணிகத் தளங்கள் ஏற்படுத்தினர். படிப்படியாக அவர்கள் வாணிக ஆட்சி, நாட்டாட்சியில் தலையிட்டு, தாமே சிறு நாட்டாட்சிகளாகத் தொடங்கின.

விஜயநகரப் பேரரசு, 16-ம் நூற்றாண்டின் பிற் பகுதியிலிருந்து சரியத் தொடங்கிற்று. தலைநகரைத் தமிழகத்தின் வடபகுதியிலுள்ள சந்திரகிரிக்கு மாற்றி, பேரரசர் பெயரளவில் பேரரசராக நின்று, சிற்றரசர் போல ஒதுங்கி ஆட்சி செய்து வந்தனர். தமிழகத்தில், அவர்கள் கீழ் ஆண்ட தஞ்சை நாயகரும், மதுரை நாயகரும் வலிமை வாய்ந்த அரசர்களாயினர். அது போலவே, கன்னடப் பகுதியில் மேல் கரையோரத்தில் இச்சேரி நாயகர்களும், மைசூர்ப் பகுதியில்