உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

பேடனூர் வெற்றியால், ஹைதருக்கு ஒன்றரைக் கோடி பொன்னுக்குக் குறையாத பெருஞ் செல்வம் கிடைத்ததென்று கூறப்படுகிறது. இது இன்றைய மதிப்பில் பத்துக் கோடி வெள்ளிக்கு மேல் ஆகிறது.

பேடனூர்ப் போரின் போது, சாவனூர் நவாப் அப்துல் ஹக்கீம் பேடனூர் அரசிக்கு உதவியளித்திருந்தான். ஏற்கெனவே சுரா மாகாணத்தின் வெற்றி மூலம், ஹைதர், மராட்டியர் பகைமையை விலைக்கு வாங்கியிருந்தான். சாவனூர் மராட்டியர் அரசை அடுத்திருந்ததனால், நட்பு முறையிலோ, எதிர்ப்பு முறையிலோ, அதைத் தன் பக்கமாக்கிக் கொள்ள ஹைதர் உறுதி கொண்டான். நட்புறவை நவாப் ஏற்காததால், ஹைதர் படைகள் சாவனூர் மீது சென்றன. நாட்டின் பெரும் பகுதி அழிக்கப்பட்ட பின்னரே,. நவாப் பணிந்து திறை செலுத்த ஒப்புக் கொண்டான். அவனிடமிருந்தும், கோடிக்கணக்கான விலை மதிப்புடைய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சமயம் ஆர்க்காட்டு நவாபின் எதிரியான சண்டா சாகிபின் மகன் மீர் ரஸா அலி கான் ஹைதரிடம் அலுவல் தேடி வந்தான். பிரஞ்சுப் போர் முறைகளிலும், பயிற்சிகளிலும் தேறிய அவனை, ஹைதர் தன் பயிற்சிப் படைத் தலைவனாக்கிக் கொண்டான்.

ஹைதரின் படை முன்னேற்றங் கண்டு, பேஷ்வா மாதவ ராவ் மனக் கொதிப்படைந்து, கோபால் ராவின் தலைமையில், ஒரு படையை அனுப்பினான். ஹைதரின் படை, அளவில் சிறிதாயிருந்தாலும், ஹைதரின் தலைமைத் திறமையால், பல களங்களில் வெற்றி கண்டது. கோபால் ராவ் மனமுடைந்து திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், விரைவில் பேஷ்வா தன் மூல பலம் முழுவதும் திரட்டிக் கொண்டு, மைசூர் மீது படையெடுத்தான். சாவனூருக்குத் தெற்கே