94
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
திப்புவின் கையில், அவன் படை பெருந்தோல்வி கண்டது. அவனும் சிறைப்பட்டான்.
ஆங்கிலேயருடன், இவ்வாறு ஹைதர் தனித்து நின்று, போராடிச் சமாளித்து வந்தான். அவனுடன் சேர்ந்து, படையெடுப்பதாகக் கூறிய நிஜாமும், மராட்டியரும் ஒரு அடி கூடப் பெயரவில்லை.
அரசியல் தந்திரியான வாரன்ஹேஸ்டிங்ஸ், குண்டூரை முகமதலியிடம் விட்டு வைக்கப்படாது என்று சென்னை அரசியலாருக்கு உத்தரவிட்டான். இச்சிறு செயலால், நிஜாமின் சீற்றம் தணிந்து விட்டது. சிறு சுமையகற்றப் பெற்ற ஒட்டகம் களிப்புடன் எழுந்து ஓடியது போல, இச்சிறு தயவுக்கு நிஜாம் வால் குழைத்து மகிழ்ந்தான்.
இது போலவே, ஆங்கிலப் படையொன்று மராட்டிய நிலத்தில் நுழைந்ததுமே, மராட்டியர் மனமாறி விட்டனர்; 1782-ல் ஆங்கிலேயருடன், அவர்கள் சால்பே ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன்படி, அவர்கள் ஹைதருடன் முன் செய்த ஒப்பந்தத்தின் வாசகங்களை மறுதளித்து, விடுதலைப் போரில் எதிரிகளின் கையாட்களாக மாறினர்.
ஹைதருக்கு உதவியாகப் பிரஞ்சுத் துருப்புகள், கடல் வழியாக பிரான்சிலிருந்து வந்தன. ஆனால், இறங்கு முன், ஆங்கிலக் கடற்படைகளுடன் அவை மோதின. இப்போர்களில் அலைக்கழிக்கப்பட்ட படையின் ஒரு பகுதியே, போர்ட்டோநோவோவில் இறங்கிற்று. இதன் பின், ஆங்கிலேயரும், பிரஞ்சுக்காரரும் ஒருங்கே தளர்வுற்றுப் போனதால், இருவருமே நேருக்கு நேர் போராட்டத்தில் ஈடுபட விரும்பாமல், மறைமுக எதிர்ப்பில் நாட்கழித்தனர்.
‘கூட்’ ஆரணியைத் திடுமென முற்றுகை செய்ய முனைந்தான். ஆனால், ஹைதர் விரைந்து ஆங்கிலப் படை-