பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைரியமும் துணிச்சலும் கூடுதலாகவே தேவைப்படும். ஏன்னா, இவங்களுக்குத்தான் இந்தத் தமிழ்ச்சமுதாயத் திலே சட்டங்களும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் கவனிப்புகளும் ரொம்ப ரொம்ப அதிகமாக விதிக்கப்பட் டிருக்கு: அதனாலேதான், இவங்களைச் சோதிக்கிற சோதிப்புக்களை எதிர்கொள்ளவும் எதிர்க்கவும் வெல்ல வும் இவங்களுக்கு, அதாவது, பெண்களுக்கு துணிச்சலும் தைரியமும் அவசியமாகத் தேவைப்படும்!' - நிர்த்தாட்சண் யமான பிடிவாதத்தில் காலூன்றியவாறு, தலையைக் கம் பீரமாக நிமிர்த்தினாள் பார்வதி; நழுவி விழுந்த மாரகச் சேலையைச் சீராக்கிக் கொள்ளத் தவறிவிடவில்லைதான். விடியல்பாப்பாவுக்குக் கீழ்வானம் ஆராரோ ... ஆரிரரோ பாடுவதை நிறுத்துகிறது; உலகநீதி’ பாடப் போகிறதாம்! வெளிச்சம் வந்து விட்டால், தன்னம்பிக்கையும் வந்து விடும் போலிருக்கிறது! மெய்சிலிர்த்தாள் பார்வதி; மெய்! 'அக்கா...அக்கா!' சின்னப்பயல் ராமையா கனவு கண்டு விழித்திருக்க வேண்டும். பாசக்கனவு சண்டிருப்பான். ஆர்வத்தோடும் ஆவலோடும் சுற்றும் முற்றும் பார்த்தவன், கமலியைக் காணாததால் ஏமாற்றம் அடைந்தவனாக, உதடுகள் துடித்திட மீண்டும் கிழிசல் பாயில் குப்புறப்படுத்துக் கோண்டான். * மின்விசிறி நின்றது. பார்வதி நெடுமூச்செறிகிறாள்!- எங்க அம்மான் மகன் ஆனந்த் எங்க கமலிக்குத் திருப்பூட்டி ரீரங்கத்துக்கு அழைச்சுக்கினுபோய் விளையாட்டுப்போல வருடம் ஒண்ணு ஆகப்போகுது: பாசத்தின் தவத்தில் மனம் நெகிழ்ந்தது: குடும்பத்தின் சுமையில் செம்பாதியைக்

14

14