பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைத்து வைத்த புண்ணியவதி கமலி'- திட்டமிட்ட பிர காரம் இந்த வருடப் பிறப்பிற்கு இங்கே அவளால் வர முடியாமல் போய் விட்டதாம்! - ஆபீஸ் போன கையோடு பதினைந்துபைசா செலவில் குடும்பத்தின் rேமலாபத்தை அக்காவுக்குத் தெரியப்படுத்தி விடவேண்டும், துளி தாமதித் தாலும், அவள் துளிகூட பொதுக்க மாட்டாள்!...ஏழ்மைக்கு பசியை மறக்கத் தெரிந்தாலும், பாசத்தை மறக்கத் தெரியவில்லையே! நகர்ந்தாள். ஸ்டவ், தீப்பெட்டி எல்லாம் தயார். பால் வந்தது. பார்வதி அடுப்பைப் பற்ற வைத்து ஒரு மிடறு காப்பி யாகிலும் போட்டுக் கொடுத்தால்தான், சிவகாமிக்கு உடம்பிலும் சூடு பிடிக்கும்; கண் மூடிக் கண் திறப்பதற் குள்ளே. இட்டிலி சுட்டு, புதினா துகையலோ, தேங்க்ாய்ச் சட்டினியோ அரைத்துத் தாளித்துவிடுவாள். அப்பால் பார்வதிக்கு அலுவலகத்தில் மத்தியான்னம் பசி ஆறுவதற். காக உப்பை முனைப்பாகத் துரவித் தயிர்ச்சாதம் பிசைந்து டி.பன்ாக்சில் நிரப்பி,பூண்டு ஊறுகாய் வைத்துத் தயாராக வைத்திருப்பாள். ராமையா பள்ளிக்கூடத்துக்கும். பார்வதி அலுவலகத்துக்கும் விடை பெற்றுச் சென்றபின். சிவகாமி யும் ஆத்மநாதனும் ஜோடி சேர்ந்து கும்பகோணம் வெற். நிலையையும், சீவலையும் பன்னீர்ப்புகையிலையையும் வாய் கொள்ளாமல் மென்று விழுங்கிய வண்ணம், ஜோடியாக தளபாகத்தில் இறங்கி விட்டார்களானால், சொல்லிவைத்த பாவனையில் மணி பன்னிரண்டு ஆகிவிடும். நீராடி, நீறு தரித்து, பூஜை பண்ணி தம்பதி சமேதராக உண்டு முடித்து ஆளுக்கொரு முடுக்கில் உறக்கம் என்னும் சிறையில் அடைககப்பட்டு. பிறகு ஐந்துமணி சுமாருக்கு விடுதலை பெற்று விடுவதும் சகஜம். அப்புறம் சாயத்தரம் காப்பி வேளையில். வீடு கலகலப்பாகிவிடும். இரவுச் சாப்பாடு தயாரிப்பது பார்வதியின் கண்ணியமான பொ அமையும். பிறகு. டிரான்ஸிஸ்டருக்குப் பொழுது

15

15