பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் துளி நெருங்கி வாங்க என்னோடு ஒட்டியும் வந்திடுங்க. மறந்திடாதீங்க: இப்ப நீங்க என் மனைவி; நான் உங்க புருஷன்!-ஆமாம், தற்காலிகமான உடன்பாடு தான்-ஏற்பாடுதான்-நான் இந்த உண்மையை மட்டும் மறந்திடவே மாட்டேனுங்க!...சரி; இப்ப அங்கே பாருங்க ளேன்; என்னோட அன்பான அப்பாவும் அன்பான அம்மா வும் மறுபடியும் கண்ணை முழிச்சுப் பார்க்கிறாங்க!” ஆச்சரியந்தான்! செந்தில்நாதனின் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் அந்தரங்கம் பேசிக் கொண்டவர்கள் மாதிரி கண் களை உருட்டி உருட்டி விழித்தார்கள்; பார்த்தார்கள். எதிர்ப்புறத்தில் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்! திருமணக்கோலம் ஏந்தி நின்ற செந்திலும் பார்வதியும் ஒரே பாவனையில் அஞ்சலி செலுத்தினர். முதியவரும் மூதாட்டியும் புதுமணத் தம்பதிக்கு ஆசி வழங்கினர்!. - வெளித் தாழ்வாரம். 'செந்தில், எனக்கு நேரமாச்சுங்க!' 'எனக்குக்கூட நேரமாக்சுத்தான், பார்வதி சரி, புறப் படுங்க!” ஒஹோ! மாதங்கி அழைத்தாளே?... 'ஆகட்டுங்க; போட்ட வேஷத்தைக் கலைச்சிட்டு, இதோ ஒரு நிமிஷத்திலே வந்திட்றேனுங்க!' என்று. சொல்லிச் சென்றவள், சொன்ன பேச்சுப்படி திரும்பி வந்தாள். கைப்பிடியில் பட்டுப்புடைவை, சோளி, கழுத்துச் சங்கிலி, மாலை எல்லாமே இருந்தன. இந்தாங்க!' என்று நீட்டினாள் பார்வதி. "இதுகளை நான் வச்சிட்டு என்ன செய்யப்போற்ேன்?"

  1. 13

113