பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோகத்தின் அமைதியோடு முறுவல் பூக்கினான் மாஜி மாப்பிள்ளை. 'பார்த்தீங்களா?-மறந்தே போயிட்டேன். பார்வதி. ஆபத்துக்கு மனசொப்பியும் மனசு இரங்கியும் நீங்க எனக்கு உதவினிங்க, உங்களோட இந்த உதவியை நான் உயிருள்ள வரை மறக்கவே மாட்டேன்; உங்களுக்கு இந்த ஜென்மத் திலே நான் என்ன கைமாறு செய்யப் போறேனோ, தெரியவே இல்லீங்க!' என்றான்; ஒரவிழிகளில் ஈரம். “வர்றேனுங்க!' 'போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க, பாரு!” ‘போயிட்டு வர்றேன்!” என்று சொல்லிக் கைகளைக் குவித்தாள். 'குட் பை போட நினைத்தவள், டாடா, போட்டாள்:- இப்ப இங்கே நடந்து முடிஞ்ச நாடகத்தை பற்றி அப்பா அம்மா கையிலே சொன்னதும், அவங்க என்ன பண்ணுவாங்களாம்? ம்...இனிமேலும் என் வழிதான் எனக்குச் சொந்தமா'

செந்திலுக்குத் தன்னுடைய கண்ணிருக்கு விடை கொடுக்கத் தெரியவில்லை:-ஆனால், பார்வதிக்கு மட்டும் விடை கொடுத்தான்!

115