பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*நல்லவேளை, அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்திலே நோய்நொடி வராதவரை, உங்க பாடு யோகத் தான்! நல்ல வங்களைத்தான் பகவானுக்குச் சோதிக்கத் தெரியும்!" மறுபடி அவள் தலையை உலுக்க வேண்டியதாயிற்று. கடமையோ நடக்கிறது. காலமோ ஒடுகிறது. கனகசபையிடம் ஒரு விசேஷம் : அவர் எழரைக்கட்டை சுருதியில் பேசவும் செய்வார் : 'அடடே, மாதங்கியா? இந்திராநகரிலேருந்துதானே பேசுறீங்க?நான் உடனே புறப் பட்டு வரணுமா? அதுக்கென்ன,உடனே வந்தால் போச்சு. இண்ணைக்கு மத்தியான்னச் சாப்பாடு, மாம்பலத்திலே, சின்ன வீட்டிலே. கோழிச் சாப்பாடு. முடிச்சிட்டு, காரிலே பறந்து நேரே அங்கே வந்திடுறேனே!... ஒ1...சரி, சரி; புரியுது. தான் ரெடி!' குது.ாகலமான சிரிப்பில் செட்டியார் குலுங்கினார். நாலு பேருக்கு நல்லவர் ஆயிற்றே? செட்டியாரையும் அழைத்திருக்கிறாளே, சமூகப் பழி காரி மாதங்கி? பார்வதிக்கும் அது சாப்பாட்டு நேரம்தான். தோழிமார்கள் அவளுக்காகக் காத்திருந்தார்கள். மனம் இல்லாமலே, உப்புமாச் சம்புடத்தைத் திறந் தாள் பார்வதி. சிநேகிதிகளுக்கு ஈவு வைத்துக் கொடுக்கும் போது, உப்பு கூடுதலாக இருக்கும் மாப்பண்டத்துக்குப் பேர்தான் உப்புமா என்ற பெயர் பொருந்துமென்று அவர் களிடம் வாதாடித் தப்பிப்பது எப்படி நியாயமாக முடியுமாம்? பாகப் பிரிவினை செய்த அந்த வேளையில், தொலைபேசி அழைப்பு வரவே விரைந்தாள். மிஸ்டர் செந்தில் அழைக்கிறாரோ?

፲፱፮

117