பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதாரணமாக இயற்கை விதியை. நியதியைப் பாரதத் திரு நாட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவே இரண்டு காந்தியை அன்புப் பாரதம் பலி வாங்கிடுச்சு . பலிகொடுத் திடுச்சு 1 சனத்தனமான பொய் வேஷதாரிங்க மலிஞ்சிட்ட தாலே, போலித்தனமாகவும் கேவலமாகவும் ஆகிக்கிட்டு இருக்கிற அருமையான இந்தத் தமிழ்ச்சமூகம் பாடம்கற்றுக் கிட இன்னும் எத்தனை காந்தி தேவைபடப் போகிறதோ?" பிரக்ஞையின் ஆற்றாமையில் அவள் கண்கள் திறந் தன. 'கொஞ்சப்பொழுதிலே, நான் எங்கேயோ போயிட் டேனே ? -நடை தொடர்கிறாள் ! நல்ல காலம் ! எங்கு கமலிப் பொண்ணு மட்டும் மகாக் கொடுமையான வரதட் சனைக்குப் பலி ஆகிடாமல் தப்பிச்சிட்டா!... ஏன், என் னாலே மட்டும் அதுமாதிரி தப்பிப் பிழைக்க முடியாதா, என்ன ? - வைராக்கியமான ரோஷத்தில் கம்பீரமாகவே தலை நிமிர்ந்தாள். தலை நிமிர்ந்தவளை இனம் விளங் காத இன்பவேதனை ஆட்கொண்டது :- ஊம் ... உஸ்மான் சாலையிலே பறந்துமறைந்தது மிஸ்டர் செந்தில் நாதனின் 'டால்ஃபின்' தான்! தெரு வந்தது. " தாயே, பசிக்குதே...' "பசிச்சால். சாப்பிடுறதுதானே, தந்தையே!” 'ஆனால், வழிதான் தெரியவீங்க. நான் அனாதைப் பாவி. உங்க மாதிரி ஒரு மகள் கூட எனக்கு மிஞ்சல்லே; நான் கொடுத்து வைக்காதவன்; அதிலேயும், படுகிழம். சொல்லச் சொல்லக் கேட்காமல், வயிறு பசிச்சுக்கிட்டே இருக்குதுங்களே ? நான் என்னா செய்வேன்? எங்கிட்டுப் போவேன் ? ' - ஈரம் சொட்ட, ஒரு ரூபாய் நாணயத்தைப் பரதே சியிடம் நீட்டினாள்; நாளைக்குக் காலையில் தன்னை வந்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டாள்!- "நிஜமாவே செந்தில்நாதன் மனிதத் தன்மையும் மனிதாபிமானமும் உள்ளவராகவே தோன்றுகிறார். அவரோட இருப்பிடம் அறிஞ்சு, அவர்கிட்டே இந்தப் பிச்சைக்காரப் பெரியவரை அனுப்பினால், நியாயமான ஒரு தமிழ் உயிர் நீதியோடு பிழைச்சுப் போகும் ! - இனி, பார்வதி நிற்கமாட்டாள் ! வயிற்றுப் பணிக்கு தேரம் ஆகிவிட்டது !...

24

24