பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூத்துக் குலுங்கிய ரோஜாப் பூக்கள் தூய்மையான நறுமணத்தைத் துரவியும் நுகர்ந்தும் காற்றில் ஆடின. சாய்ந்தாடினா. ரோஜா என்றதும், செந்தில் தோன்றினான் ! செந்தில் என்றவுடன் டால்ஃபின் நிற்கிறது. அவள் மனம் மகிழ்ந்தாள், மனம் நெகிழவும் செய் தாள். செந்திலுக்கு ரோஜாப்பூ வென்றால்தான் எவ்வளவு நேசம், பாசம், பிரியம் ! - யார் இந்தச் செந்தில்?... செந் தில்நாதன் என்கிற செந்தில் ஒரு நாளைப் போலவே தின மும் இனிமையான விடியல் நேரத்திலே இங்கே வருகிறார்: தெருவிலே நிற்கிறார்: வாசலில் நான் நின்றால், என்னை என்னவோ ஒரு நம்பிக்கையோடு கனவு காண்பவரைப் போலப் பார்க்கிறார். பெருமூச்சு விடுகிறார். பிறகு. தோட்த்திற்குள் நுழைந்து, சமிக்ஞையில் அனுமதி கோரி, ஒரேயொரு ரோஜாப்பூவை மட்டிலும் அலுங்காமல் நலுங் காமல் கிள்ளி எடுத்துக் கொண்டு கைகளை ஆட்டி டாடா' சொல்லிக் கொண்டு, அழகான அந்த ரோஜாப்பூ வண்ணக் காரிலே பறந்து விடுகிறார் !... செந்தில் யாராம் ? நான் யாராம் ? - இமைகள் துடிக்க நடந்தாள். தெருவிலே, பெரிய இடத்தைச் சார்ந்த பெரிய கல்யாண ஊர்வலம் ஒன்று வந்து கொண்டிருந்தது பார்வதிக்குப் பெருமூச்சுத்தான் வந்தது. 'தம்ம மாதிரி சின்னச்சின்ன வீடுங்களிலே பூச்சாண்டி காட்டுகிற இந்த வரதட்சணைப் பிசாசு இந்த மாதிரியான பெரிது பெரிதாக உயர்ந்து நிற்கிற பங்களாக்களையும் கூட விட்டு வைக்கிறதாகப் பத்திரிகை எதுவும் சொல்லக் காணோமே? வேடிக்கையான ஜனங்கள்! வினோதமான சமுதாயம் !மனித ஜாதியும் மனித சமுதாயமும் நவநாகரிகமான இந்த அவசர யுகத்துக்கு ஊடாலே நின்று நிதானிச்சு எப்பத் தான். எப்படித்தான் உண்மையாகவும் சத்தியமாகவும் திருந்தவும் சீர்திருந்தவும் போகிறதோ ?... எல் - ஒற்றுமையாக ஒன்றுபட்டு இருக்க வேணும் என்கிற சிவ

器、

23