பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லாந்து மண்ணில் கிடந்த அந்தப் பெண் அப்போது: தான் தன்னுணர்வு பெற்றவளைப் போன்று, தரையில் கைகளை ஊன்றிக்கொண்டு மெள்ள மெள்ள எழுந்திருக்க முயற்சி செய்தாள்: பார்வையின் உணர்வுகளில் பதற்றம் மூளவே, அவசரம் அவசரமாக மாரகச்சேலையைச் சரி: செய்து கொண்டாள். சங்கிலி இப்படி மெலிந்திருக்க வேண் டாம்: ஆலுைம் அதற்குச் சமர்த்து அதிகம். ஆகவே அது: அவள் மார்பகத்தில் மையம் கணித்து மயங்கியபடியே தவழ்ந்து கிடக்கிறது, "தாரா, சமர்த்தா மெதுவா எழுந்திருச்சிடு, ஊம்; அவ்வளவுதான் ' சொற்கள் கவலையால் தேய்ந்தன. ஆனல், நெற்றி மேட்டிலே ரத்தம் மாத்திரம் தேயாமல் வழிந்து கொண்டிருந்தது. சட்டத்தை எதிர்பார்க்காமல், தலைக்குக் கவசம் அணிந்திருந்தால், இப்படிப்பட்ட எதிர் பாராத விபத்துக் காலத்தில் ரத்தம் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும்! டியர் குட்டிச் சாத்தானின் வெற்றிகரமான சிரிப்பு பகல் வெளிச்சத்தில் இன்னமும் மாறவில்லை. ஸ்கூட்டரைச் சரிசெய்து நிறுத்தினன் வாலிபன். யதேச்சையாகத் தன்னைப்பார்த்த இளைஞன். மறு: விடிையில் முகத்தைத் திசைதிருப்பிக் கொண்டதைக் கவ. னித்ததும் பார்வதிக்கு நெஞ்சில் நெருஞ்சிமுள் குத்திவிட்ட மாதிரி உணர்வுகள் வலித்தன. ஓ.. செந்தில்நாதன்!?அவளுக்கு நினைவு வந்தது!-விடியல் பொழுதிலே வீட்டின் முகப்புத் தோட்டத்தில் சிந்தனை வசப்பட்டவளாகச் சுய தரிசன நிலையில் மெய்மறந்து நின்றிருந்த நேரங்களில் உஸ்மான் சாலையில் நேர்வழியிலேயே போக வேண்டிய வன், ரோஜா நிறப் புதிய காரைத் திருப்பி மகாலட்சுமித், தெருவில் மடக்கி நிறுத்தியபின். தன்ன்ையே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, பிறகு தோட்டத்து ரோஜாப் பூக்களைப் பறித்துச் சென்ற சந்தர்ப்பங்களை அவளால்

38

38