பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற மாதிரி எண்பத்தி மூணிலேயே நான் மாலையும் கமுத்துமாக ஆகியிருக்கமாட்டேன : ஒன்றுவிட்ட அறந் தாங்கி அத்தை வீட்டின் சம்பந்தம் வரதட்சணைத் தக ராறில் முறிஞ்சி போயிடாமல், கல்யாணமும் ஜாம் ஜாம்னு நடந்திருக்குமே?- கமலிக்குக் கடிதம் வரைந்தாள். மாலையிலேயே வீட்டுக்குப் போகும் வழியில் கட்டில் சேர்த்து விடலாம்! - அயர்ச்சியில் கொட்டாவி பறிந்தது. தினம் தினம் எவ்வளவு துரம் தான் நடப்பதாம்? யூசுப் காப்பி கொடுத்தான். எடுபிடிப் பையன் சாலமன் பதட்டமாக உள்ளே பாய்ந் தான்: தெருவிலே ஒரு விபத்து நடந்திருச்சு; தெருத் திருப்பத்திலே மடங்கின கருங்கல் லாரி ஒண்னு எதிர்த்து வந்த புது ஸ்கூட்டர் மேலே பேய்த்தனமாய் மோதி ஸ்கூட்டர்லே வந்தவங்க ரெண்டு பேரையும் அலக்காத் துரக்கி யெறிஞ்சிடுச்சு: நல்லகாலம், அவங்க உயிர் தப்பிச் சிட்டாங்க ' என்று விவரம் தெரியப்படுத்தின்ை. அவன் மறுகணம் ; கனகசபை, கதர்ச்சட்டை தும்பைப்பூவெனப் பளிச்சிட மனிதத் தன்மையின் பரிவோடு விரைந்து வெளியேறினர். பார்வதிக்கும் உள்ளே இருப்பிடம் கொள்ளவில்லை. நடுத்தெரு, பேயைக் காளுேம்! . நெற்றிப் பொட்டிலே, பொட்டுக்குப் பதிலாகப் பீறிட்ட சிகப்பு ரத்தத்தைச் சோற்றுக்கையால் அழுத்திக் கொண்டே, தலை சுழலத் தடுமாற்றத்தோடு நகர்ந்தான் அந்த வாலிபன், ஜரிகை வேட்டியைத் தட்டி விட்டடி நடந்தான், முறுக்கு மீசையில் மண் ஒட்டாமல் இருந்திருக் கலாம்! . -

37

37