பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கொத்தமல்லி பசுமைப் புரட்சி செய்கிற் போக்கில், அபாரமாக மணம் பரப்புகிறது. தாய் தந்தையர் சாப்பிடும் அழகைப் பார்த்துப் பர வசப்பட்டவளாகச் சாப்பிட்டாள் அவள். கொடடாவி விட்டாள். - 'ஏங்க, நாளைக்குத்தானே ஞாயிற்றுக்கிழமை?' என்று சந்தேகம் கேட்டாள் அம்மா. - - "இல்லே, நாளைக் கழிச்சு!" என்ருர் அப்பா, அப் பட்டமான அலைக்கழிப்புக் கேலி: . உடனே, அம்மாடி. பார்வதி! எனக்குத் தெரியும்: நாளைக்குத்தான் ஞாயிறு, வீவு! நாளைக்கு உனக்கு வீட்டி லேயும் கூட லிவு! தான் வாரத்திலே ஆறுநாள் முடிச் சுடுந்தான் புத்தகக் கம்பெனியிலே அசராமல் வேலை பார்க் கிறே. வீட்டிலே ஒரு நாளாச்சும் உனக்கு முழுசா ஒய்வு வேணுமா ?' என்று நீதி ஒதினாள் அம்மாக்காரி. பேசிக்கொண்டிருக்கும்போதே, அம்மாவுக்குக் குரல் தழதழத்தது. - பார்வதி திடுக்கிட்டாள்; திகைத்தாள். ஏக்கமும் தவிப்பும் சூழ்ந்திட, அன்னையை நோக்கினாள். அம்மா வின் உடம்புக்கு ஒன்றும் வந்து விடவில்லை!-நெஞ்சிலே கவலைகள் கட்டு மீறுகையில், உணர்ச்சிகளும் கட்டுமீறிப் போய் விடுவது அம்மாவைப் பொறுத்தமட்டில் சர்வ. சாதாரணமான நடவடிக்கைதான்!- நான் இன்னம் எத்தனை நாளேக்கு உங்களுக்காகக் கஷ்டப்படப் போகி றேன் ? முதலிலே வயிற்றுப் பாட்டைப் பார்ப்போம்!வா அம்மா சாப்பிடலாம்; அப்பா வந்து குந்துங்க." என்று அழைத்தாள். - - ‘. . . . . . சோற்றைப் பிசைந்து ஒருவாய் சாப்பிட்டு ஒரு வாய்த் தண்ணீரையும் குடித்தவள், பாருகுட்டி நீ பேசுறதைப் பார்த்தால், ரொம்ப ரொம்பச் சீக்கிரத்திலேயே நீ கல் யாணம் பண்ணிக்கிட்டு எங்களை விட்டுப் பிரிஞ்சிடுவே போலத் தோனுதே ?. என்னமோ, கருமாரி கடாட்சத்

48.

48