பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்த்துக்கொட்டி விட்டது!- அப்பாவுக்கும் அம்மாவுக் கும் இப்படியெல்லாம் முடியாமல் போய் விடுவதற்கு ஆதியும் அந்தமுமான காரணம் இந்தப் பாவித்ான்!-- ‘நம்ம பாரு குட்டிக்கு எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாய்க் கல்யாணம் முடிச்சு வைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு சீக்கிரமாய் நாம ரெண்டு பேரும் மனசு தேறி, உடம்பும் தேறி. முன்னைப் போலவே தெம்போட நடமாடத் தொடங்கிப்பிடலாமுங்க 1 என்று அம்மா பிரச்சினையைக் கிளம்பிய துப்பு பகவானுக்கே அர்ப்பணம். மழை ஒலமிடுகிறது. பார்வதியின் உள்ளத்தின் உள்ளமும் மீண்டும் ஓலமிடு கிறது. பெண்ணாகப் பிறக்கிறதுக்கு மாதவம் செஞ்சிட் வேணும்னு மதிப்பும் மரியாதையும் வச்சுப் பேசப்படுற ஒரு பெண்ண்ாக நான் நல்லதனமாய்ப் பிறந்திட்ட அந்த ஒரு பாவத்தைத் தவிர.- வேறு எந்தப் பாவத்தையும் செஞ்சறியாதவளாச்சே நான்?... புண்ணியம் பண்ணின. அப்ப்ா அம்மாவுக்கு இருந்திருந்து துரதிர்ஷ்டம் பிடிச்ச தான் பெண்ணாகப் பிறக்கிறத்துக்குத் தானா, இவங்க ரெண்டு பேரும் தவம் இருந்தாங்களா ?... ஒரு வேளை தான் இவங்களுக்கு மகளாகப் பிறக்காமல் இருந்தி ருந்தால், இவங்களுக்கு நெஞ்சுவலிப் பிரச்னை ஏற்பட்டி ருக்கவே ஏற்பட்டிருக்காதோ, என்னமோ ?. இல்லாட்டி, அப்பாவும் அம்மாவும் ஒரு சந்தர்ப்பத்திலே ரகசிய ஆலோ சனை நடத்தின மாதிரி, நான் ஆண பிள்ளையாகப் பிறந் திருந்தால், இவங்க ரெண்டு பேரும் இப்படி அவதிப்படுற, துக்குப்பதிலாக, ஒஹோன்னு ஆனந்தமாய்ச் சுகப்பட்டி ருப்பாங்களோ ? - அவளுக்கும் நெஞ்சில் வலி எடுக்கத் தொடங்கி விட்டது; அந்த வலியை மிகைப்படுத்தி மேன் மைப்படுத்திக் கொள்ளக் கங்கணம் கட்டிக்கொண்ட்வன் கணக்கிலே, அவளுடைய மனச்சாட்சியினின்றும் பிசிறு தட்டிய அந்நினைவை நினைத்துப் பார்க்கவும் துணி

毒马

51