பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறாள்; ஒருவேளை, நான் பிறந்த இந்த மண்ணிலேயே தான் செத்து மடிஞ்சிட்டா அப்பறம். என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் நெஞ்சு வலி என்கிற பிரச்னையும் ஏற். படாமலே போயிடும்தானே? - பார்வதி வீரிட்டாள்: ஐயையோ!' கணங்கள் பேய்க்கணங்களாக ஓடின! கணக்கு நோட்டுடன் வந்தான் ராமையா. அவளுடைய கணக்குத்தான் அவளுக்குத் தெரியாது:மற்றக் கணக்கெல்லாம் அத்துப்படி அப்பா பசி இல்லாமலே, பழங்கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிரு.ர். அம்மா தூங்கினாள் தோசை சாப்பிட்ட மயக்கம், தூங்கி எமுந்ததும், சமையலுக்கு உதவ அழைப்பதாகச் சொன்னாள். சூரிய ஒளிக்கு வமிவிட்டாள். பார்வதி; அவள் பெரு. மூச்சுவிட நன்றாகவே பழகியிருந்தாள். இல்லாததும் பொல்லாததுமான ஏதேதோ நினைவுகள் படம் எடுத்தன; படம் காட்டின. காலையில் காப்பி நேரத்தில், மயிலாப்பூர் மாப்பிள்ளையைப்பற்றி அப்பா நம்பிக்கையோடு தகவல் சொன்னார். சாயந்தரம், பெண் பார்க்கும் படலம் திரும்பவும் ஏடு விரியப் போகிறது-அவன் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு, தனக்குத்தானே விரக்தி யோடு சிரித்துக்கொள்கிறாள். சுகமாகவும். சுதந்திரமாக அம். கெளரவத்தோடும் நிம்மதியோடும் சுகப்பட்டு வாழ் வதற்கு இந்த வாழ்க்கைக்குத் தெரியாதோ?-தெரியவே தெரியாதோ? இப்படிப்பட்ட சோதனையான வாழ்க்கை முறைக்கு இப்படியொரு போராட்டமான பிறவி, முறை தேவைதானா? - இப்போது அவளுக்குத் தலையும். வலித்தது. -

52

52