பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிச்சத்தம் ஒரேயொரு தரம் கேட்ட து. அதற்குள்ளாகவா மணி ஒன்று ஆகியிருக்கும் இப்போது மணி பன்னிரெண்டரையாக இருக்கக் கூடாதா? அப்பா!'-பார்வதியின் பாசவிம்மல் உள் வட்டத்தில் கழிக்கிறது. தம்பி முருகையன் வழி நெடுகிலும் கதை கதையர்கச் சொல்லிக் கொண்டே வந்தான். படக்கதையா?-தமிழ்ப் படக் கதையா? ஊகூம்!-எல்லாம் அந்தப் பூலோ ரம்பை மாதங்கியின் கதைதான்! .. அடி, பாவி!- பற்களைக் கடித்துக் கொண்டேயிருந் தாள் பார்வதி. அந்தக் காவல்துறை வாகனம் மறுபடி உஸ்மான் சாரே யிலும் எதிர்பட்டது. சற்றுமுன் மாதங்கி நின்ற இடத்தை கோட்டை விட்டு விட்டு, இப்போது அவள் நிற்காத இடங்களைத் தேடிப் பார்த்துத் தேடுகிறதோ? பார்வதிக்குச் சமூகப் பொறுப்பு கொண்ட ஆத்திரம் பற்றி எரிந்தது! متمم ! 6 tinته சைக்கிள் ரிக்ஷா மடங்கியது. திரும்பு முனையில்சாராயம், பாட்டுப் படித்துக் கொண்டிருந்தது. காலத்தைப் பற்றி அதற்கு என்ன கவலை? மகாலட்சுமித் தெரு வந்தது. வீடும் வந்தது. மருந்துப் பொட்டணமும் கையுமாக இறங்கினான் பார்வதி, பாசத்தின் கட்டுக் கடங்காத துடிப்பில் அவள் மனம் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

81

81