பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் கார்மோகினி, இன்னிக்கு ஒங்க பேரிலே குறி வச்சிருக்கா போலே- தனியாப் போனா, மறுபடியும் குறுக்கு மறிச்சு உங்களைத் தூக்கிப் போட்டுக்கினு போகாமல் ராத்திரிக்குத் துரங்கவே மாட்டாளுங்க, அக்கா!' - "ஏம்ப்பா, நீ யாரைச் சொல்றே? சமூகச் சேவகி. மாதங்கியையா?’ - "சமூக சேவகியா அவள்? துர...! அவள் ஒரு சமூக வேசி. பச்சையாய்ச் சொன்னா, அவள் ஒரு பச்சைத்தேவடி யாள்!" - "நிஜமாத்தான் சொல்லுறீயா?" "சத்தியமாவும் சொல்றேனுங்க.ஏங்க, ஏழைன்னா அவனுக்கும் சத்தியம் பேசத் தெரியாதுங்களா? தெரிய வேண்டாங்களா?" பார்வதி மெய்சிலிர்த்தாள். ஆனால்... மெய்" சிலிர்த்து விடவில்லை. அப்பா இந்நேரம் நெஞ்சு வலியால் எப்படி எப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிருரோ? தெய்வமே! பார்வதி உருகித் தவித்தாள்; தவித்து உருகினாள்; 'ம்...புறப் படுப்பா!' என்று உத்தரவு பிறப்பித்தாள். . தற்போது: சைக்கிள் ரிச்ஷா திரும்பிக் கொண்டிருந்தது, பார்வதி விழிப்புணர்வுடன் ஜாக்கிரதையாகவே அமர்ந்திருந்தாள். அந்த எச்சரிக்கை உணர்வின் உறுத்தல் தன்னை என்னவோ செய்தது போலவும் அவள் உணர்ந்த தள்ள்! பாசத்தைப் போன்றே நட்பும் எட்டும்தொலைவி லேயே இருந்தால் என்னவாம்?. - z -

sở

80