பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட மாட்டோமா?. சரி, சரி; முதலிலே உன் பசி LITL:தடயாச்சும் தீர்த்துக்க 'சிவகாமிதான் பேசுகிறாள், "ஆமாம்மா! சாப்பிட்டுட்டு வேலைக்குப் போயிச்சு வா. பார்வதி, நேரம் ஆச்சுது! 'என்று உட்புறத்திலிருந்து தினமாகக் குரல் கொடுத்த புள்ளி ஆத்மநாதன்தான்! பார்வதி சலனம் அடைந்தாள்: இவங்க தொனி நல் லாவே இல்லையே ?... ஒருவேளை, இவங்களுக்கு நான் எப் பவுமே தீராத பிரச்சனையாகவே ஆக்கிடுவேனோ?. அப். படி ஆயிட்டா, அப்பறம் இவங்க ரெண்டுபேரையும் உயி ரும் உடம்புமாக நான் எப்படிக் காண முடியும்? -நெஞ்சு முகாரி ராகத்தில் விம்ம, பசி ஆதித்தாளம் போட, அவள் ஒரு வழியாகக் காலைப்பலகாரம் சாப்பிட் டு முடித்தாள். உப்புமா வென்றால், உப்பு தூக்கலாகத்தான் இருக்கும் அதற்காக, இப்படித் தாகம் எடுப்பதில் அர்த்தம் இல்லை: லேடி டைப்பிஸ்ட் பார்வதி புறப்பட்டாள்!-- 'போயிட்டுவர்றேன். அப்பா!... போய் வரேன்” அம்மா! என்று அன்போடும் பாசத்தோடும் சொல்லிக் கொண் டாள். - 'பத்திரமாய்ப் போயிட்டு, பத்திரமாக வாம்மா!' பாரமும் பாசமும் ஒரே ராகத்ல், ஒரே பல்லவியைப் £isriq Gor. - தலைவாசலுக்கு வந்தாள் பார்வதி. கூறை பிய்ந்து பரிதாபமாகவும் அலங்கோலமாகவும் கிடந்த மாட்டுத் தொழுவத்தை இப்போதும் பார்வையிட்டாள். நினைவுகள்; பொங்க, வேறுபுறம் திரும்பினாள். மாட்டுத் தொழி வத்தை இன்று பெரியதம்பி பிரித்து விடுவானாமே! இனி, அது எதற்கு? வெளி வாசலுக்கு விரைந்தவள். திடுக்கிட் இாள்! -

100

100